Posted in
உலகில் மற்றைய நாடுகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளுக்கென பணம் சம்பாதிக்கவும், பட்டதாரிகள் தமக்கு தகுந்த வேலைக் கிடைக்கும்வரையும், பணம் சம்பாதிக்க ஏதாவது ஒரு தொழிலைச் செய்வதாக உயர்கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுவரையில் அவர்கள் ஹோட்டல்களில் சர்வர்களாகவும், சமையல்காரர்களாகவும் அல்லது தொழிலாளியாகவும் வேலை செய்வதாக கூறிய அமைச்சர், அதனையிட்டு அவர்கள் வெட்கப்படுவதில்லை எனவும், அப்படியிருக்கயில் எமது நாட்டவர்கள் வெட்கம் காரணமாக அவ்வாறு தொழில் செய்வதில்லை எனவும் உயர் கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.