Posted in
சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமெனக் கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மீதான விசாரணையை மேற்கொள்ளும் மூன்று நீதியரசர்கள் குழுவை நியமிப்பது நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இராணுவ நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதால், கோரிக்கையை தற்போது பரிசீலிக்க முடியாதென, கோரிக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச பிரதி சட்டத்தரணி பர்சானா ஜமீல் தெரிவித்தார்.
எனினும் இந்தக் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சரத் பொன்சேகா சார்பில் இன்று நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா குறிப்பிட்டார்.
இருப்பினும் அண்மையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதன் நீதியரசர் உபாலி அபேரட்ன, குறித்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றில் மூன்று நீதியரசகர்கள் மத்தியில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் கூறியிருக்கவில்லை எனவும், கோரிக்கையை உயர் நீதிமன்றிற்கு அனுப்பி வைக்குமாறே அவர் கூறியுள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் சத்யா ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் இராணுவ நீதிமன்றம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பொன்சேகாவின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது எந்த அளவிற்கு சிறந்தது என தான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சரத் பொன்சேகாவின் கோரிக்கையை மேலும் பரிசீலனை செய்வதற்கென நீதிமன்றம் நாளைவரை ஒத்திவைக்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.