Nov 20101
By Oddamavadi News
Posted in
நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நீர் விநியோகக் கட்டணத்தை அறவிடுவதில்லையென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சிற்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இதற்கான முடிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாடசாலைகளின் நீர்க் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாகாண பாடசாலை, தேசியப் பாடசாலைகள் அனைத்திற்கும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் காரணமாக நாட்டில் உள்ள சுமார் 9,800 பாடசாலைகள் நன்மையடையவுள்ளன.