Posted in
தற்போது இலங்கை பல்கலைக்கழகங்களில் காணப்படும் நிலை குறித்து தம்முடன் கலந்துரையாடுவதற்கு முன்வந்து அனுமதிதரவேண்டும் என இலங்கையில் அமைந்திருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
கியூபா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய தூதரங்களிற்கும் இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கும் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு 203 பல்கலைக்கழக மாணவர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், 27 மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பதில் இணைப்பாளர் சஞ்சீவ பண்டார தற்போதைய பல்கலைக்கழக சூழ்நிலை குறித்து தெளிவுபடுத்த வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.