Posted in
உலகிலேயே செழிப்பான நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இலங்கை 2009 ஆம் ஆண்டிலும் பார்க்க இவ்வருடம் 9 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. 110 நாடுகளை உள்ளடக்கிய 2010 ஆண்டிற்கான இந்த தரவரிசை பட்டியலினினை ஐக்கிய இராச்சிய லெகற்றும் கல்விக் கழகம் வெளியிட்டுள்ளது. இதில் 59 ஆவது இடத்தினை இலங்கை பெற்றுள்ளது.
ஆசிய பசுபிக் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இலங்கையைவிட கீழ் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா கடந்த வருடத்தினையும் பார்க்க 10 இடங்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு 88 ஆவது இடத்தில் அண்டை நாடான சீனாவினையும் பார்க்க கீழ் நிலையில் உள்ளது என ஐக்கிய இராச்சிய லெகற்றும் கல்விக் கழகம் வெளியிட்டுள்ள உலகிலேயே செழிப்பான நாடுகள் தரவரிசைப் பட்டியலின் மூலம் தெரியவருகிறது.