Follow me on Twitter RSS FEED

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

Posted in
நபிகள் நாயகத்தை அவதூறாக சித்திரித்து தயாரிக்கப்பட்ட சினிமாப் படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். லிபியாவில் தூதரக அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 

ஏமனில் நடந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இது போன்று சூடான், துனிசியா உட்பட பல நாடுகளில் அமெரிக்கத் தூதரங்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் பங்குள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரங்கள் மீது மேலும் தீவிர தாக்குதல்கள் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக அரோபிய தீபகற்பத்தில் தாக்குதல் நடத்த தங்கள் ஆதரவாளர்களுக்கு உத்தர விட்டுள்ளனர். 

எனவே, அந்த நாடுகளுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும்படி சூடான் மற்றும் துனிசியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. 

சூடானில் உள்ள கார்போம் நகரில் அமெரிக்கத் தூதரகம் உள்ளது. அங்கு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, அங்கிருக்கும் ஊழியர்களைக் காப்பாற்ற சிறப்பு அதிரடிப்படையைப் பாதுகாப்புக்கு அனுப்பும்படி அமெரிக்கா விடுத்த கோரிக்கையை சூடான் நிராகரித்தது. எனவே அங்கிருந்து தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற அமெரிக்கா உத்தர விட்டுள்ளது. இதே போன்று ஏமன் அருகேயுள்ள துனிசியாவில் இருந்தும் ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.

0 comments: