Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 16634 மில்லியன் ரூபாய் செலவில் 2857 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்று காலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் முன்னலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன், கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், படைஅதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடு, கமநகும, வெளிநாட்டு நிதிநிறுவனங்களின் நிதி, அமைச்சுக்களின் நிதி, கிழக்கு மாகாண சபை ஆகிய நிதி ஒதுக்கீடுகளின் மூலம் இவ் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த அபிவிருத்திப்பணிகளில் இதுவரை 70 சசவீமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.