Follow me on Twitter RSS FEED

ஹைகோப் சந்தேகநபருக்கு 5 வருட கடூழிய சிறை

Posted in
ஹைக்கோப் நிதி மோசடி வழக்கின் இரண்டாவது சந்தேகநபருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான ஹைகோப் நிறுவன பணிப்பாளர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஹைகோப் நிதி மோசடி வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஹைகோப் நிறுவன பணிப்பாளர் வெலிங்டன் டிஹோட் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார். 

இதனையடுத்து அவருக்கு 5 வருட கடூழிய சிறை தண்டை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் 20 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் இன்று ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் 12 குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். 

ஹைகோப் நிறுவனத்தில் சேவையாளராக வெலிங்டன் கடமையாற்றியதாகவும், ஏற்கனவே 10 மாத சிறை தண்டனை அனுபவித்துள்ளதனாலும் அவருக்கு குறைந்த பட்சத் தண்டனை வழங்குமாறு அவருடைய சட்டத்தரணி நீதிமன்றை கேட்டுக் கொண்டுள்ளார். 

இதனைக் கருத்திற் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ், குற்றவாளிக்கு 5 வருட கடூழிய சிறை விதித்துத் தீர்ப்பளித்தார். 

இதேவேளை, ஹைகோப் நிதி மோசடி வழக்கின் முதலாவது சந்தேகநபரான சரத் பொன்சேகாவின் இராணுவ நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருப்பதால் அவர் தொடர்பான வழக்கை ஒத்திவைக்குமாறு சரத் பொன்சேகா சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக் கொண்டார். 

ஆதனை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ், வழக்கை நவம்பர் மாதம் 30ம் திகதிவரை ஒத்திவைத்தார்.

0 comments: