Posted in
ஒக்டோபர் 05, 2010 சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சனிக்கிழமை தினங்களில் திணைக்களத்துக்குச் செலவாகும் தொகையை ஈடுசெய்ய முடியாமையே இதற்குக் காரணமெனத் தபால் மாஅதிபர் எம் கே பி திசாநாயக்க குறிப்பிட்டார்.
இது தொடர்பாக திறைசேரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஆனால் அது குறித்து கொள்கை ரீதியிலான தீர்மானமொன்றை இதுவரை எடுக்கவில்லையெனவும் தபால் மா அதிபர் கூறினார்.
தபால் நிலையங்களைச் சனிக்கிழமைகளில் மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதன்மூலம் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடுமெனத் தபால் சேவைப் பயனாளிகள் கூறுகின்றனர்.
அதேபோன்று அரசாங்கத்தின் இத்திட்டத்திற்குத் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் கூறுகிறது.