Follow me on Twitter RSS FEED

மீனவர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 6056 பேர் இணைவு

Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் கீழ் செயற்படும் கடற்றொழில் திணைக்களத்தினூடாக 6056 பேர் இதுவரை மீனவர் ஓய்வுதியத்திட்டத்தில் இணைந்துள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்

இவ்ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ளவர்களில் சுமார் 900 பெண்களும் அடங்குவர். இம்மாவட்டத்தில் 200 மீனவர்கள் ஓய்வுதியம் பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார். 18 வயது முதல் 59 வயது வரையான மீனவர்கள் தினமும் இவ் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆழ்கடல், கரையோரம், வாவி மீன்பிடிகளில் ஈடுபடும் மீனவர்களே இத்திட்டத்தினூடாக நன்மை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 22500 குடும்பங்கள் முழுநேர மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்படத்தக்கது. முழு இலங்கையிலும் அதிகளவிலான மீனவர்கள் இத்திட்டல் இணைந்துள்ளமை மட்டக்களப்பு மாவட்டதில்தான் அதிகம் என்பதும் குறிப்படத்தக்கது.
இம்மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளையும் சேர்ந்த மீனவர்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்வேண்டியது.

0 comments: