Posted in
ஒக்டோபர் 10, 2010 தூரப் பயணங்களில் ஈடுபட்டுள்ள பேருந்துகள் நிறுத்தும் இடங்களிலுள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரத்தைப் பரிசோதனை செய்வதற்குப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது.
தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பேருந்துப் பயணிகளுக்கு உணவுப் பண்டங்களை விற்கும் 2,916 உணவகங்களைத் தாம் அடையாளங் கண்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்தார்.
இந்த உணவகங்கள் பெரும்பாலானவற்றில் காணப்படும் உணவுப் பண்டங்கள் உரிய தரத்தைக் கொண்டிருக்கவில்லையெனப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் இத்தகைய உணவகங்கள் தொடர்பான தகவல்களை 0112665329 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 0714416872 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் பேருந்துப் பயணிகளிடம் கேட்டுள்ளது.