Posted in
வெளிநாடுகளில் வேலைப் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தப் பெண் கோடிக் கணக்கில் நிதி மோசடி செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்தப் பெண்ணிடம் சாரதியாக கடமைப் புரிந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அநுராதபுரம் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட குறித்தப் பெண், ராகமையில் வசித்து நீண்ட காலமாக நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் வேலைப் பெற்றுத் தருவதாகக் கூறி இந்தப் பெண் 40 பேரிடம் 6 லட்சத்துக்கு அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார். கைது செய்யப்பட்டப் பெண்ணிடமிருந்து 5 லட்சம் பெறுமதியான நகைகளும், ஒரு தொகைப் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.