Follow me on Twitter RSS FEED

ஹிட்லரின் ஆட்சியை இலங்கை அரசு பின்பற்றுகின்றது: மங்கல

Posted in
முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார்.

இச்சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக ஒரு இலட்சம் பேரைத்திரட்டி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். 

இன்று கண்டியில் இடம் பெற்ற சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

1933ஆம் ஆண்டு ஹிட்லருக்கு எதிராக மக்கள் எழும் போது ஹிட்லர் அரச அதிகாரங்களை கைப்பற்றினார். அது போல் இன்று இலங்கையிலும் நீதிச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு போன்ற பல்வேறு ஆணைக் குழுக்களை ஜனாதி பதி தனது கையில் எடுத்துள்ளார்.

அவ்வாறு எமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட தினம் தான் செப்டம்பர் 8ஆம் திகதி ஆகும். எனவே நவம்பர் 8ஆம் திகதிக்கு இரண்டுமாதம் பூர்தியாகின்றது. அன்றும் நாடலாவிய ரீதியில் ஒரு ஆர்பாட்டம் செய்யவுள்ளோம். அதே விதமாக எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி மூன்று மாதமாகிறது. இருப்பினும் டிசம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமை தினமாகையால் அன்று எமது உரிமை மீறப் பட்ட தினத்தை நினைவு கூறுவதுடன் மாபெறும் போராட்டம் ஒன்றை நடத்தி சரத் பொன்சேக்காவை மீட்டெடுப்போம் என்றார்.

0 comments: