Follow me on Twitter RSS FEED

சந்திரிகா கொலை முயற்சி வழக்கு

Posted in
கண்ணில் காயத்துடன் இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவை 11 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்ய முயற்சித்த காரணத்துக்காக ஒரு தமிழருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று 30 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொழும்பில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலில் சந்திரிகா பண்டாரநாயக்கா உயிர் தப்பினார். ஆனால் அவரது ஒரு கண்ணின் பார்வையை அவர் இழந்தார்.
1999 ஆம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த வழக்கின் குற்றவாளியான சத்தியவேல் இலங்கேஸ்வரன், தான் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து கொழும்புக்கு வெடிபொருட்களை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
வேறு மூவர் மீதான இதே தாக்குதல் குறித்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகின்றது. ஆனால் அவர்கள் குற்றச்சாட்டை மறுக்கிறார்கள்.

0 comments: