Posted in
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை மூன்று சமபாகங்களாகப் பிரித்து இந்து மகா சபை, நிர்மோஹி அகாடா, சுன்னி வக்ஃப் வாரியம் ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும், குழந்தை வடிவில் ராமர் சிலை இருக்கும் இப்போதைய வழிபாட்டிடம் இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும்; இன்னும் 3 மாதங்களுக்கு இப்போதுள்ள நிலையிலேயே இந்த இடம் பராமரிக்கப்பட வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் வழிபடப்படும் ஜென்ம பூமி, பாபர் கட்டிய மசூதி என்று முஸ்லிம்களால் அழைக்கப்படும் வழிபாட்டிடம் ஆகியவை தொடர்பான சுமார் 60 ஆண்டு காலத்துக்கும் மேற்பட்ட இந்த வழக்கில் மிகுந்த பரபரப்புக்கு இடையே மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது.