Posted in
ஒக்டோபர் 05, 2010 சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு எதிர்க் கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.
அந்தக் கட்சி நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் ஊடகப்பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைக் குறிப்பிட்டார்.
உரியமுறையில் வேண்டுகோள் விடுக்கின்ற பட்சத்தில் மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யமுடியும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அதன்மூலம் மன்னிப்பு வழங்கக்கூடிய நிலைமை உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது என்றும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெளிவாகக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் அரசாங்கத்திடம் அந்த வேண்டுகோளை பகிரங்கமாக அவர் விடுத்திருந்தார் என கயந்த கருணாதிலக கூறினார்.