Posted in
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கொரிய மொழி எழுத்துப் பரீட்சை எட்டாவது தடவையாகவும் இன்று நடத்தப்படுகிறது. இவ்வேளையில் சில விஷமிகள் பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கு குறுந்தகவல் அனுப்புவதாக கூறி 25,000 ரூபா முதல் 40,000 ரூபாவரையில் சிம் கார்ட்டுகளை விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மோசடியினை தடுக்க இன்றைய தினம் 700 பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
காலை 8.30 மணி முதல் 11.45 மணிவரை நடைபெறும் இப்பரீட்சையின் போது கடமையிலீடுபட்டிருக்கும் பொலிஸாரும் கையடக்க தொலைபேசிகளை உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸாரும் காலை 7.30க்கே பரீட்சை நிலையங்களுக்கு கடமைக்கு வருவர். பரீட்சையின் போது மோசடியிலீடுபடும் நபர்களை கண்டுபிடிக்கும் பொலிஸாருக்கு பணியகம் பரிசுகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.