Posted in
நேற்று இரவு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அவரை குற்றவாளியென அறிவித்து 30 மாத கடூழிய சிறைத் தண்டணை வழங்கத் தீர்ப்பளித்திருந்து, இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வும் அங்கீகரித்தமையால், சரத்பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் என இராணுவ ஊடகப்பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இரவு சுமார் 10.30 அளவில் சரத் பொன்சேகா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதேவேளை அவர் சக கைதிகளுடனா இருக்கிறார் என பலர் மத்தியிலும் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் தனிமையாக சிறைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.