Posted in
இலங்கையில் 30 வருடகால தீவிரவாதத்தை முறியடித்த வெற்றி நாயகனுக்கு ஜனாதிபதி கொடுத்த பாரிய பரிசே கடூழிய சிறைதண்டனை எனவும், அதற்கு தான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் ஆட்கொள்வதாகவும், அரச உயர்மட்ட அதிகாரிகளின் நூல் பொம்மைகளாக இராணுவ அதிகாரிகள் மாறியுள்ளதாகவும் அனோமா பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், தீர்ப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றிகூறுவதாகவும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஜனாதிபதியின் சுயரூபம் நன்கு தெளிவாகியுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த முடிவினால் தாம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்தும் போராடுவோம். இதுதான் ஆரம்பம் இந்த போராட்டத்தில் நாம் பின்வாங்கப்போவதில்லை. உண்மையான இராணுவ வீரர்களிடம் இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என அனோமா பொன்சேகா தெரிவித்தார்.