Posted in
ஒக்டோபர் 11, 2010 இவ்வாண்டில்இதுவரை காலப்பகுதியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் 50 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக 3,406 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளார்.
இதில் 773 பாரிய குற்றச் செயல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளும் அடங்குவதாகப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 3,248 பதிவானதாகவும் இவற்றுள் 109 பெண்கள் கொலையுண்ட சம்பவங்கள் உள்ளடங்குவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்திலும் நீதவான் நீதிமன்றங்களிலும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் குறிப்பிடுகிறது.