Follow me on Twitter RSS FEED

அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு எதற்குத் தடை?

Posted in
தமிழீழ விடுதலை‌ப் பு‌லி‌க‌ள் அமைப்பு மீதான தடை ப‌ற்‌றி ‌விசாரணை செய்துவரும் ‌‌‌தீ‌ர்‌ப்பாயம் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று கரு‌த்து கே‌ட்டறியும் வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. கட‌ந்த 1991ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் ‌தமிழீழ விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீதான தடை இந்தியாவில் ‌ஆ‌ண்டுதோறு‌ம் நீ‌ட்டி‌க்க‌ப்ப‌‌ட்டு வரு‌கிறது. ‌இதை‌த் தொட‌ர்‌ந்து தமிழீழ விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீதான தடையை ‌ப‌‌ற்‌றி ‌விசாரணை செய்யும் ‌‌தீ‌ர்‌ப்பாய‌ம் கரு‌த்துக்களை கே‌ட்டறிந்து வரு‌கிறது. 

செ‌ன்னை, ஊ‌ட்டி‌யி‌ல் நடைபெ‌ற்ற கரு‌த்து கே‌ட்‌டறிதலின்போது ம‌‌.தி.மு.க பொது‌ச் செயல‌ர் வைகோ, இல‌ங்‌கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் உ‌ள்‌ளி‌ட்டோ‌ர் ஆஜரா‌கி தமிழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌‌மீதான தடையை ‌நீ‌க்க கோ‌ரி வா‌தி‌ட்டன‌ர். 

இ‌ந்‌நிலை‌யி‌ல் செ‌ன்னை‌யி‌ல் 3ஆவது முறையாக ‌தீ‌ர்‌ப்பாய‌ம் இ‌ன்று கரு‌த்து கே‌ட்டது. ‌தமிழீழ விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த்‌தி‌ற்கு ஆதரவாக ஏராளமான வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் ‌தீ‌ர்‌ப்பாய‌ம் மு‌ன்பு ‌திர‌ண்டதா‌ல் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டதென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வைகோவு‌ம், பழ.நெடுமாறனு‌‌ம் இ‌ன்றும் ‌தீ‌ர்‌ப்பாய‌ம் மு‌ன்பு ஆஜரா‌கி தமிழீழ விடுதலைப் புலிக‌ள் ‌மீதான தடையை ‌நீ‌க்குமாறு வ‌லியுறு‌த்‌தின‌ர். இதேபோ‌ல் ‌தீ‌ர்‌ப்பாய‌ம் மு‌ன்பு வழ‌க்க‌றிஞ‌ர்களு‌ம், ஈழ‌த் த‌மிழ‌ர் ஆதரவாள‌ர்களு‌ம் ஆஜரா‌கி, தமிழீழ விடுதலைப் பு‌லிக‌ள் இய‌க்கமே அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டு‌வி‌ட்டதாக கூற‌ப்படுவதா‌ல் தடை ‌நீ‌ட்டி‌ப்பு தேவை‌யி‌ல்லை எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

0 comments: