Posted in
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் செயலாளராகச் செயற்பட்ட சேனக டி சில்வாவை, குறித்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்தது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அறிக்கை ஒன்றை நீதிமன்றிற்கு சமர்பித்த இரகசிய பொலிஸார், சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு சமர்பித்துள்ளதாகவும், அந்த அறிக்கையினை பரிசீலித்த சட்டமா அதிபர் சந்தேகநபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க போதுமான சாட்சியங்கள் இல்லையெனக் கூறியதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் காரணமாக சேனக டி சில்வாவை குறித்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் கேட்டுக் கொண்டனர். இந்தக் கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபரான சேனக டி சில்வாவை குறித்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.