Posted in
படையினர் வெறுமனே சண்டையிடுபவர்களாக மட்டும் இல்லாது நாட்டின் சமூக பொருளாதார செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். இந்த வகையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான இரத்தத்தின் பெரும் பகுதித் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் படையினர் இருந்து வருகின்றார்கள்.
மேற்கண்டவாறு யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் நகரத்தில் அமைந்துள்ள பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஆதார வைத்தியசாலைகளுக்கு கட்டில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய படைகளின் கட்டளைத் தளபதி
அவுஸ்திரேலியாவில் இயங்கும் லக்சலிய அறக்கட்டளை நிதியம் என்னுடன் கொழும்பில் வைத்து கதைத்தபோது குறிப்பிட்டார்கள் நாங்கள் கொழும்பில் பல்வேறு செயல் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இந்த வகையில் யாழ். மாவட்டத்திற்கும் மருத்துவ துறைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் அது சம்பந்தமான அறிக்கைகளை தரும்படி கேட்டு இருந்தார்கள்.
நான் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட போது அவர் இதன் தேவைகளை எனக்கு தந்ததன் அடிப்படையில் இன்று இந்த தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக உள்ளது.
படையினரைப் பொறுத்த வரையில் பல்வேறு சமூகத்தேவைகளையும் நிறைவு செய்வதில் தம்மாலான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். இந்த வகையில் மீள்குடியேற்றம் இடம் பெற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கிணறுகளை துப்புரவு செய்தும் பாடசாலைகளில் இடிபாடுகளை அகற்றியும் கட்டடங்களை நிர்மாணித்தும் செயல்பட்டு வருகின்றார்கள்.
மக்களின் அடிப்படைத் தேவையான வீடுகளைக் கூட தம்மாலான வசதிக்கு ஏற்ப கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணித்துக் கொடுத்தும் வருகின்றார்கள். நான் 1980 ஆம் ஆண்டு படையில் இணைந்து 81 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். அன்று இருந்த யாழ்ப்பாணத்தையும் இன்று இருக்கும் யாழ்ப்பாணத்தையும் மீள் நினைவுபடுத்தி பார்க்கின்றேன். யாழ்ப்பாணத்தின் கட்டளைத் தளபதியாக இன்று இருக்கும் நிலையில் என்னாலான உதவிகளை செய்ய முயற்சிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு 02 சத்திரசிகிச்சை கட்டில்களும் 15 நோயாளர் கட்டில்களும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 02 சத்திர சிகிச்சை கட்டில்களும் 14 நோயாளர் கட்டில்களும் வழங்கப்பட்டன.
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சத்திர சிகிச்சைப் கட்டில்கள் வழங்கப்பட்டதுடன் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஒரு சத்திரசிகிச்சை கட்டிலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ் வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை பயிற்சி தாதிய அலுவலர்கள் உட்பட மற்றும் படைகளின் கட்டளைத்தளபதிகள் ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.