Follow me on Twitter RSS FEED

தனுன சார்பில் ஆஜராக சட்டத்தரணிக்கு அனுமதி

Posted in
தனுன சார்பில் ஆஜராக சட்டத்தரணிக்கு அனுமதிஹைகோப் நிதி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபரான தனுன திலகரட்ன வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதனால் அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜராக அனுமதியளிக்குமாறு சட்டத்தரணி ஒருவர் கொழும்பு மேல் நீதிமன்றைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், அசேல ருக்கவ என்ற சட்டத்தரணி இவ்வாறு அனுமதி கோரியுள்ளார். நீதிமன்றில் ஆஜராகுமாறு தனுன திலகரட்னவிடம் இருந்து ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளதா என ஆராயுமாறு அரச தரப்பு சட்டத்தணி தமின் தொட்டவத்தை நீதிமன்றை கேட்டுக் கொண்டார். 

இதேவேளை, தனுன திலகரட்னவின் கையொப்பம் அடங்கிய ஆவணமொன்றினை சட்டத்தரணி அசேல ருக்கவ நீதிமன்றில் சமர்பித்துள்ளார். குறித்த ஆவணத்தை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ், தனுன திலகரட்ன சார்பில் ஆஜராக சட்டத்தரணி அசேல ருக்கவவிற்கு அனுமதி வழங்கினார். 

மேலும் தனுன சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி ஏதாவது தவறுகள் செய்ய முயற்சித்தால் மேன்முறையீட்டு நீதிமன்றின் மூலம் அவருக்கு தண்டனை வழங்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ் எச்சரித்துள்ளார்.

0 comments: