Follow me on Twitter RSS FEED

மட்டக்களப்பில் தமிழ் கிராமசேவை உத்தியோகத்தர் மீது பொலிசார் தாக்குதல்

Posted in
நேற்றைய தினம் (30.10.2010) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் கிராமத்தில் கிராமசேவையாளராக கடமையாற்றுகின்ற திரு.ஜெகநாதன் என்பவர் தனது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு சிவில் உடையில் வந்த  பொலிஸ் உத்தியோகத்தர் சுபைகிர் தர்பிக் நாகூர் இஸ்மாயில் என்பவரா கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அத்துடன், கிராமசேவையாளரிடமிருந்த காணி சம்பந்தமான ஆவணங்களும் கிழித்தெறியப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான கிராம சேவையாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கிராமசேவையாளர் மேலும் தெரிவிக்கையில்,
தனது பிரிவுக்குட்பட்ட தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை அண்மைக் காலங்களில் முஸ்லிம்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாகவும் இதற்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டிருந்த வேளையிலேயே தான் இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் தான் இவ்வாறு தாக்கப்பட்டது சம்பந்தமாக தனது மேலதிகாரிகளிடமும் மற்றும் பொலிஸ் நிலையத்திலும் தான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு கிராமசேவையாளர் தாக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த கண்டன அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளதாவது.

நேற்றைய தினம் (30.10.2010) ஜெகநாதன் என்ற கிராமசேவையாளர் தாக்கப்பட்டதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும். தான் இது சம்பந்தமாக அரசாங்க அதிபரிடம் அறிவித்துள்ளதாகவும் மேலும் இவ்வாறான அரசாங்க அதிகாரிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிராமசேவையாளரைத் தாக்கிய குறித்த அந்த பொலிஸ் அதிகாரி ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments: