Follow me on Twitter RSS FEED

தாக்குதல் நடத்தியோர் கப்பம் மஞ்சு, வட்டி சோமானந்த

Posted in
களனியில் நேற்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் நடத்தியது பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்களே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது, 

நேற்று களனியில் பெற்றோர்களின் ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்பாட்டத்திற்கு 200, 250 பேர் வந்திருந்தனர். ஆனால் களனி பகுதியில் வசிக்கும் 50 மாணவர்கள் கூட களனிப் பல்கலைக்கழகத்தில் இல்லை. ஆனால் பெற்றோர் 200 பேர் உள்ளனர். களனி பல்கலைக்கழக பெற்றோர் ஆர்பாட்டம் மேற்கொண்டாக அவர்கள் கூறுகின்றனர். 

குடிபோதையில் வந்தப் பெண்கள் பல்கலைக்கழக மாணவரை கடத்தி அவர் மீது தாக்குதல் நடத்தி அவருக்கு இம்சைக் கொடுத்து விரட்டினர். யார் இவர்களை அனுப்புகின்றனர். அதுவரை இரவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இப்போது பகிரங்கமாக வந்து ஊடகங்கள் இருக்கையில் பொலிஸார் இருக்கையில் மாணவர்களுக்குத் தாக்குதல் நடத்துகின்றனர். 

இவர்கள் வேறு யாரும் அல்ல. சில சில சமயங்களில் மேர்வின் சில்வாவுடன் இருந்தவர்கள், கிரிபத்கொடை சந்தையில் பணம் சேர்க்கும் மஞ்சு, இவர்தான் கிரிபத்கொடை சந்தைக்குச் சென்று கிரிபத்கொடை வர்த்தகர்களிடம் பணம் சேர்க்கும் கப்பம் பெறும் மஞ்சு, மற்றுமொருவர் வட்டிக்கு பணம் வழங்கும் சோமானந்த. ஒருவர் வட்டிக்கு பணம் வழங்குவபவர் மற்றையவர் கப்பம் கோருபவர். 

குடிபோதையில் பெண்கள் சென்று பல்கலைக்கழக மாணவரை கடத்தி தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் ஜனாதிபதி கூறுகிறார் ஒழுக்கமும் நேர்மையும் உடைய நாடு வேண்டுமென்று. நாங்கள் கேட்கிறோம். ஜனாதிபதியின் ஒழுக்கம் நீதி ஒதுவா? என பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments: