Follow me on Twitter RSS FEED

கிழக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் ஜனாதிபதி

Posted in
ஒக்டோபர் 05, 2010  நேற்று திருகோணமலை கடற்படை முகாமில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
பயங்கரவாதத்திலிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்ததன் பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிகைகளுக்கு  உண்மை வடிவம் கிடைக்கவேண்டுமெனில் அதன் நன்மைகள் மாகாண மக்களிடையே பகிரப்படவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்பவை குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
பிரதேச அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைககளுக்காக அரசாங்கம் 89 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதென ஜனாதிபதி ஊடகப்பிரிவு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியான ஒரு மாகாணத்திற்கு என அரசாங்கத்தினால் பாரியளவு தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பௌதிக ரீதியில் கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தியடைந்துள்ளதுடன் அங்கு மக்களின்  ஆன்மீக அபிவிருத்திக்காகத் தற்போது கவனம் செலுத்தவேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகள் குறித்து இனரீதியாக அல்லாது அனுதாபத்துடன் பார்க்கவேண்டுமெனவும்  கூறிய ஜனாதிபதி,தமக்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதில் எந்தவொரு இனத்தவருக்கும் மொழி ஒரு பிரச்சனையாக அமைந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் இன ரீதியான பிரச்சனை நிலவவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சகலரும் ஒரே நாடு, ஒரே இனம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்திக்கான நிதி இன ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படுவதில்லையெனக் கூறிய ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொருவீட்டிற்கும் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு பணிப்புறை விடுத்துள்ளார்.
வீடற்ற பிரச்சனைக்கு உடனடித் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

0 comments: