Follow me on Twitter RSS FEED

தீர்வு காணப்படாது விட்டால் இன வன்முறைகள் ஏற்படும்

Posted in
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு நேற்று இரண்டாம் நாள் இஸ்லாமியர்கள் வாழும் ஓட்டமாவடி பிரதேசத்தில் நடைபெற்றது.


ஓட்டமாவடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த அமர்வில் சாட்சியமளிப்பதற்கு பெண்கள் உட்பட கணிசமான இஸ்லாமியர்கள் சில தமிழர்களும் சாட்சியமளித்தனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தில் காணி தொடர்பாக தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த இஸ்லாமியர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவே இஸ்லாமியர்கள் அமைப்பு ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் தமது சாட்சியங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

காணி, கல்வி மற்றும் உரிமைகள் அனைத்திலும் இனங்களிடையே சம வாய்ப்பு இருக்குமானால் தான் பிரச்சினைகளின்றி வாழ முடியும் என சாட்சியமளித்த ஓட்டமாவடி ரகுமத் பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் ஐ.எல்.டி சாகிபு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 சத வீதம் இஸ்லாமியர்கள் வாழ்ந்தாலும் 22 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பிற்குள் அவர்கள் முடங்கிக் கிடப்பதாக சுட்டிக் காட்டிய அவர், இம்மாவட்டத்தில் காணிப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்படாது விட்டால் எதிர்காலத்தில் தமிழ் மற்றும் இஸ்லாமியர்களிடையே பாரிய அளவில் இன வன்முறைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றார்.
வாகரைப்ப பிரதேசத்திலுள்ள மதுரங்கேனி குளத்திலிருந்து 1985 மற்றும் 1990 ஆம் ஆண்டு இன வன்முறைகளின் போது வெளியேறிய இஸ்லாமியர்களின் மீள் குடியேற்றத்தின் அவசியத்தை வலியுறுத்திய விவசாயி எம்.பி.எம் முஸ்தபா, அங்கு ஏற்கனவே வாழ்ந்த முஸ்லிம்களின் குடியிருப்பு காணிகளில் தமிழர்கள் குடியிருப்புகளை அமைத்திருப்பதாகவும், முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை தமிழர்கள் அபகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த அமர்வின் போதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக பலர் சாட்சியமளித்திருந்தார்கள். காணிப்பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம்கள் தமது சாட்சியங்களில் குறிப்பிட்டிருந்தாலும் தமிழர் தரப்பிலிருந்து சாட்சியமளிக்க ஒருவரும் பங்கேற்க்கவில்லை. இதனைத் தவிர காணாமல் போனவர்கள் தொடர்பாக நான்கு பேர் ஆணைக்குழுவிடம் இரகசியமான முறையில் சாட்சியமளித்தார்கள் என பிபிசி செய்திச்சேவை தெரிவித்துள்ளார்.

0 comments: