Follow me on Twitter RSS FEED

பொன்சேகாவின் மேன்முறையீடு, விசாரணைக்கு அனுமதி

Posted in
தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு மீதான ஆரம்பக்கட்ட பரிசீலனைகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியுமென, அதற்கான முன்னறிவித்தலை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ளது. 

ரஞ்சித் டி சில்வா மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனு கடந்த சில நாட்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கென மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதியரசர் ரஞ்சித் டி சில்வா இன்று குறிப்பிட்டுள்ளார். 

எனினும் மனு பரிசீலனையின் போது இராணுவ நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பது குறித்து ஏற்பட்ட பிரச்சினையை ஆராய மனுவை உயர் நீதிமன்றிற்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, மனு மீதான விசாரணை முடியும்வரை சரத் பொன்செகா பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டிருந்தது. எனினும் அந்த விடயம் தொடர்பில் நீதியரசர்கள் இருவரிடமும் வெவ்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதாக நீதியரசர் ரஞ்சித் டி சில்வா தெரிவித்தார். 

எனினும் அந்த விடயம் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கென மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: