Follow me on Twitter RSS FEED

மரண தண்டனைக் கைதிகளின் எதிர்காலம்; ஆராய மூவர் கொண்ட குழு

Posted in
மரண தண்டனைக் கைதிகளின் எதிர்காலம்; ஆராய மூவர் கொண்ட குழுமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹெக்ரர் யாபா தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

மரண தண்டனைக் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகரவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர் இந்தக் குழுவை நியமித்துள்ளார். 

மரண தண்டனை 2002 ஆம் ஆண்டில் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டதிலிருந்து பெருமளவு கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே, சிறைகளில் இடநெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக அமைச்சர் குணசேகர நேற்று முன்தினம் இந்தக் குழுவை நியமித்ததாக சிறைச்சாலைகள், புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோகர் எம். எஸ். சதீஸ்குமார் தெரிவித்தார். 

இதேவேளை, வழக்குகள் தொடரப்படாமலும், எதுவிதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமலும், சிறைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென சட்டத்தரணிகள் பத்து பேர் கொண்ட குழுவொன்றை அமைச்சர் குணசேகர நியமித்துள்ளார். 

இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுமென்றும் சதீஸ்குமார் கூறினார்.

0 comments: