Follow me on Twitter RSS FEED

தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை

Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழ் கடல் மீன் பிடியில் ஈடுபடும் சகல மீனவர்களும் பாவிக்கும் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகள் மற்றும் வாவி மீன்பிடியில் ஈடுபடுத்தும் தடைசெய்யப்பட்ட 3.5 அங்குலத்திற்கும் குறைவான தங்கூஸ் வலை, முக்கூட்டு வலை, சுருக்கு வலை போன்றவற்றை நாளைமுதல் ஒருவார காலத்திற்குள் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.

ஒரு வார காலத்திற்குள் சட்ட விரோத வலைகளை ஒப்படைக்காத மீனவர்கள் மீது மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருனாரட்னவின் ஆலோசனையின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்ட வலைகளைக்கொண்டு மீன் பிடிப்பதால் மட்டக்களப்பு வாவியிலுள்ள 112 மீனினங்களில் 28 வகையான மீனினங்கள் அழிந்து விட்டதாகவும் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

0 comments: